பணி மாறுதல் மற்றும் பணி நிரவல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல் விவரம்

            2013-14 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி உயர் /மேல்நிலை பள்ளிகளில் 01.08.2013ல் உள்ளவாறு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்டவர்கள் பணியிடங்கள் தேவையான பள்ளிகளுக்குக் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் மற்றும் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். 
            எனினும் இவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தற்பொழுது இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
           பணிநிரவல் மற்றும் பணி மாறுதல்  மூலம் நியமனம் செய்யப்பட்டு கூடுதல் பணியிடத்தில் பணியேற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உபரி பணியிடத்தில் பணிபுரிந்த பள்ளியில் ஊதியம் பெற்று வந்த கணக்குத் தலைப்புகளிலேயே புதிய பணியிடத்திலும் ஊதியம் எற்று வழங்கிட அனைத்து தலைமையாசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பணிநிரவல் மூலம் உபரி பணியிடம் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் கூடுதல் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அளவைப்பதிவேட்டில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment