மாணவியின் கவிதை








A. தேவிகா. 10 ஆம் வகுப்பு மாணவி. கொட்டாவூர், வேலூர் மாவட்டம்.  

அன்பை தருவாள் தாய்.
ஆதரவை தருவார் தந்தை.
பிறப்பும், இறப்பும் தருவது கடவுள்.
ஒழுக்கமான வாழ்வை தருவது குரு.

1. உன் தாய்க்கு எச்.ஐ.வி வந்தபோது நீ சொன்னாய் – நீ தான் என்றும் என்தாய் என்று.  
ஆனால் இப்போது உனக்கு எச்.ஐ.வி வந்துள்ளது. இப்போது நான் சொல்வேன் – நீ தான் என்றும் என் நண்பேன்டா.
( எச்.ஐ.வி பாதித்தவர்களை என்றும் விலக்கி வைக்க வேண்டாம்.)

2. எய்ட்ஸ் என்பது கண்ணாடிபோல. அதை நம் மனதைரியத்தால் உடைத்தெறிந்து வாழ முடியும். எனவே சோர்ந்து விடாதே.

3. எய்ட்ஸால் நாமும் பாதிக்கப்பட வேண்டாம். பாதித்தவர்களையும் கைவிட வேண்டாம்.

4. எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை பெறுவோம். பரவாமல் தடுப்போம். புதிய சரித்திரம் படைப்போம்.

5. எய்ட்ஸ் என்பது நம் எதிரி. அது நம்மை அழிக்கும்முன் ஒழுக்கத்துடன் வாழ்ந்து நாம் அதை அழிப்போம்.

6. என் எதிரி அழும்போது நான் சிரித்தேன்.
அவன் தோல்வியுறும்போது நான் ரசித்தேன்.
அவனுக்கு எய்ட்ஸ் என்ற உடன் நான் துடித்தேன்.

7. ஓசோன் படலம் இவ்வுலகை புறஊதாக் கதிர்களிடமிருந்து காப்பது போல நாமும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் சகமனிதர்களை காப்போம்.

8. கடிகாரம் காட்டுவது நேரம்.
எய்ட்ஸ் பாதித்தவரின் மனதில் பாரம்.
அவர்களை அரவனைக்க தேவை நம்மனதில் ஈரம்.

9. ஆலமரத்தை அடியோடு சூறாவளி தகர்த்தெறிவது போல மனித இனத்தையே அடியோடு தகர்ப்பது எய்ட்ஸ். எய்ட்ஸ்ஸை ஒழிப்போம். மனித இனத்தை காப்போம்.

10. கடல் என்றால் அலை இருப்பது போல, ஒவ்வொருவரின் மனதிலும் எய்ட்சை ஒழிக்கும் எண்ணம் இருக்க வேண்டும்.

11. செழுமைக்கு அழகு தமிழை வளம் செய்தல்.
  மொழிக்கு அழகு தமிழை முதன்மையாக்குதல்.
 உயரினங்கட்கு அழகு தமிழுக்கு இணங்கல்.
நமக்கு அழகு தாய் மொழியாம் தமிழ் மொழியை பேசுதல்.

12. தமிழுக்கு சாதி இல்லை. மதம் இல்லை. இனம் இல்லை. அது ஒரு நூலகம் போன்றது. அது நம் அனைவருக்கும் சொந்தம்.

13. தமிழ் நம் மூதாதையர் காலத்திலும் இருந்தது. நம் தலைமுறையிலும் இருக்கிறது. நம் வருங்கால சந்ததியும் தமிழ் பேசும். இயற்கையே தமிழ். தமிழே நம் தெய்வம்.

14. மின்மினியாய் மறையும் மின்னல். படபடவென அடிக்கும் சாரல். கையில் தொட்டு பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி பொங்குதம்மா.

15. தாயை பிரிந்து தவிக்கிறேன்.
தனிமையில் வாடி அழுகிறேன்.
வாழ்க்கை என்றால் வெறுக்கிறேன்.
தாயைப் பார்க்க துடிக்கிறேன். – வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகன்.

16.  பெண் ஒரு பூ. இன்பம் என்றால் மலர்வாள், துன்பம் என்றால் வாடுபவள்.

17. இலட்சியத்தை அடைய வட்டமிடு.
வளைந்து நின்று திட்டமிடு.
உனக்கென தனியே ஒரு சட்டமிடு.
அறிவை பெற சித்தப்படு.
வெற்றி பெற்றதும் கொட்டமிடு.

18. வாழ்க்கையில் இருக்க வேண்டியது மகிழ்ச்சி.
இருக்க கூடாதது தளர்ச்சி.
நாம் அனைவரும் எடுக்க வேண்டியது முயற்சி.

19. வாழ்க்கை என்பது ஆறு போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
 அது குளம் போல தேங்கி நின்றால் அன்றே நம் வாழ்க்கை முடிந்துவிடும்.

20. வாழ்க்கையில் வரும் பள்ளம் மேடு.
அதை நினைக்காமல் நீ ஓடு.
பெருமை புகழை தேடு.
அதை வாங்கி கொடுப்பது உன் தாய்நாடு.

21. நமக்கு தெரியாது நம் முன்னோர்களின் பெருமை.
தெரிந்து கொள்ளவேண்டியது அவர்களின் நேர்மை.





 

0 comments:

Post a Comment