ஓவியம் வரைவது எப்படி?


ஓவியம் வரைவது எப்படி? நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  பயிற்சி முகாம்



                            தேவகோட்டை -ஆக -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர்  கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள் வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.

                                            பயிற்சியிக்கு வந்தவர்களை  ஏழாம் வகுப்பு மாணவி தனம் வரேவேற்றார்.   பயிற்சியின் ஆரம்பமாக   அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது.பயிற்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர்  கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள் வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.முதலில் மாணவ,மாணவிகள் ஏற்கனவே வரைந்த ஓவியங்களை பார்வையிட்டு திருத்தம் செய்தார் .அனைத்து மாணவர்களையும் வெள்ளைத்தாளில் முதலில் பென்சில் ஓவியமாக தாமரையை வரைய சொன்னார்.பென்சிலால் வரையும்போது எப்படி எல்லாம் வரைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார்.அவருடைய மனைவி உமையாள் ஆச்சியும் உடனிருந்து பயற்சி அளித்தார்.
                                                                  கலைமாமணி  ஓவியர் ஆவுடையப்பன் பயற்சியில் பேசும்போது கூரியதாவது , குழந்தைகளின் ஓவியம் எப்பொழுது முழுமையடையும் என்றால் என்னைப் போன்ற ஓவிய ஆசிரியர்களால் திருத்தம் செய்யப்படும்போதுதான் அவை முழுமையடையும் .பென்சில் ஓவியம்,வண்ண ஓவியம் இவற்றிற்கு தனித் தனியே நோட்டு வைத்து வரைய வேண்டும்.ஓவியம் வரைந்து பழக வேண்டும் என்பது அச்சடிக்கப்பட்ட படத்தைப் பார்த்து வரையாமல் வரைந்த ஓவியத்தை பார்த்து வரைவது ஆகும்.முதலில் வெளி வட்டம் வரைந்து பழக வேண்டும்.வரைந்து பழக கூடிய நோட்டுக்களை வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.தாளில் கோடு போட்டு பாதியாக வரைந்து பழகுதல் வேண்டும்.எப்பொழுதும் நிதானமாக,பொறுமையாக வரைய கற்றுக் கொள்ளவேண்டும்.ஓவியம் வரைய அதிக நேரம் எடுத்துக் கொண்டால் ஓவியம் சிறப்பாக அமையும் இவ்வாறு பேசினார்.                                                                             
                              மாணவிகள்சொர்ணம்பிகா,கிருஷ்ணவேணி பரமேஸ்வரி,,காயத்ரி,சௌமியா,பவனா ,மங்கையர்க்கரசி  மற்றும் மாணவர்கள்    நடராஜன்,பவித்ரன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு பதில்கள் பெற்றனர்.பயிற்சியின் நிறைவாக ஓவியர் சில மாதிரி படங்களை மாணவர்களுக்கு வழங்கி பயிற்சி அளித்தார்.பயிற்சியினை  ஆசிரயர் முத்துலெட்சுமி தொகுத்து வழங்கினார்.மாணவன் கண்ணதாசன் நன்றி கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்திருந்தார்.

  பட விளக்கம் : 1) IMJ-1209 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவியம் வரைவது தொடர்பான பயற்சி முகாமில் கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர்  கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள் வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.உடன் உமையாள் ஆச்சி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் 

2) IMJ-1214,1216,1201  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவியம் வரைவது தொடர்பான பயற்சி முகாமில் கலைமாமணி விருது பெற்ற தஞ்சை கண்ணாடி ஓவியக் கலைஞர்  கண்டனூர் ஆவுடையப்பன் மாணவ,மாணவிகளுக்கு ஓவியங்கள் வரைவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி அளித்தார்.உடன் உமையாள் ஆச்சி


0 comments:

Post a Comment