தினகரன் செய்தி தாளில்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக
கூட்டம் தொடர்பான செய்தி மற்றும் போட்டோ வெளியாகி உள்ளதை காணுங்கள்.


தேவகோட்டை. : தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக ....
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
பதிவு செய்த நேரம்:2014-09-03 11:59:54தேவகோட்டை. : தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக ....
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
தேவகோட்டை. : தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். தலைமையாசிரியர்
சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாணவி தனலெட்சுமி வரவேற்றார். தேவகோட்டை
பாண்டியன் கிராம வங்கி முதுநிலைமேலாளர் சௌந்திரபாண்டியன் பேசுகையில், நம்
நாட்டில் அனைவரும் வங்கிக்கணக்கு துவங்க முன்வரவேண்டும். மாணவ
பருவத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்து கொண்டு, சேமித்த பணம் சிறிய
தொகையாக இருந்தாலும் அதனை வங்கியில் செலுத்தி சேமிக்கும் பழக்கத்தை
வளர்த்து கொள்ள வேண்டும். சிறு வயதில் சேமிக்க துவங்கினால், பிற்காலத்தில்
சேமிப்பு கண்டிப்பாக கைகொடுக்கும்.
நாம் ஆடம்பர வாழ்க்கை வாழ
ஆசைப்பட்டு, கனவு கண்டால் மட்டும் போதாது. உண்மையுடன் உழைக்க வேண்டும்.
நேர்மையாக சம்பாதித்த பணத்தில் சேமித்து, நம் தகுதிக்கேற்றவாறு வாழ்க்கையை
அமைத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். தேசிய திறன் வழித்தேர்வு
மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டன. மேலும், மாணவிகள் திருக்குறளை அபிநயத்துடன் நடனமாடி
பாடிக்காட்டினர். மாணவர் ரஞ்சித் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment