சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தூய்மையான பள்ளி விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த தூய்மையான பள்ளி விழிப்புணர்வு
நிகழ்ச்சி நடைபெற்றது.
தூய்மையான பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தலைமையாசிரியர் பேசுகையில் தூய்மையான
இந்தியாவை உருவாக்குவதில் நமது பங்களிப்பை செய்வதுடன்,அதனை அனைவருக்கும்
எடுத்து சொல்ல வேண்டும் என்றார்.மகாத்மா காந்தியின் சுத்தம் தொடர்பான
கூற்றுகளை எடுத்து கூறினார்.ஆசிரியை முத்துலெட்சுமி சுத்தம் தொடர்பாக
மாணவர்,மாணவர்களிடையே கலந்துரையாடினார்.மாணவர்களின் தன்சுத்தம் குறிப்பாக
பல்துலக்குதல்,குளித்தல்,நகம் வெட்டுதல்,தூய்மையான உடை
அணிதல்,சாப்பிடுவதற்க்கு முன்பு சோப்பினால் கை கழுவுதல் ,சுகாதாரத்துடன்
உணவு உண்ணுதல் போன்ற தன் சுத்தம் சார்ந்தும் குப்பை தொட்டிகளை
பயன்படுத்துதல் மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பேணுதல் சார்ந்தும் அறிவுரை
கூறினார்.
எட்டாம் வகுப்பு மாணவி சொர்ணாம்பிகா தமிழக அரசின் சுத்தம் தொடர்பான உறுதி
மொழியைக் கூற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த தூய்மையான பள்ளி விழிப்புணர்வு
நிகழ்ச்சியில் தூய்மை தொடர்பான உறுதி மொழியை மாணவர்கள் எடுத்து கொண்டனர். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
0 comments:
Post a Comment