தேவகோட்டை ஜூன்- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலைப்
பள்ளியில் திருச்சி அண்ணா கோளரங்க அறிவியல் மைய திட்ட இயக்குனர் லெனின்
தமிழ் கோவன் அறிவியல் தொடர்பான விளக்கங்களை ' நம்மை சுற்றி அறிவியல்' என்ற
தலைப்பில்ஆய்வுக் கூடம் இல்லாமல் அறிவியல் சோதனைகளை வெறும் கையால்
மாணவர்களுக்கு செய்து காண்பித்து அசத்தினார்.
நாம் உயிரோடு இருப்பதே வெற்றிடம் இருப்பதால்
தான்.வெற்றிடத்தில் ஆரம்பித்து வெற்றிப்பாதையில் நோபல் பரிசைத் தட்டிச்
சென்ற அறிவியல் விஞ்ஞானிகளை அழகான கதையோடு அறிமுகப்படுத்தி அறிவியல் செயல்
முறைகளை எளிமையாக செய்து காட்ட ஆரம்பித்தார்.முதலாவதாக காற்றின் அழுத்தத்தை
இரண்டு,மூன்று எளிய செயல்களால்,எளிமையான பொருள்களை வைத்து
உணரவைத்தார்.ஸ்ட்ரா ஏன் எப்பொழுதும் ஒரே அளவாக உயரம் குறைவாக
தயாரிக்கபடுகிறது என எப்பொழுதாவது சிந்தித்திர்களா?என ஆர்வத்தைத் தூண்டி
அதற்கான காரணத்தை மாணவர்களையே செய்ய சொல்லி தெளிவுபடுத்தினார்.எல்லா
விசயங்களையும் சிந்தித்து நாம் செயல்படுத்த வேண்டும் என்பதை காகத்தின்
தாகம் தணிந்த கதையை கண்ணாடி டம்ளரின் அடியில் கிடக்கும் தண்ணீரில் கல்லை
போட்டாலும் தண்ணீர் மேலே வராததை சோதனையாக செய்து காண்பித்து மாணர்வகளின்
சிந்தனையை தூண்டி அறிவியலின் உண்மையை உணர்த்தினார்.
பேப்பரை சரிபாதியாக மடித்தால் எத்தனை முறை மடிக்க முடியும்
என்பதை செய்தித்தாளை வைத்து மாணவர்களை மடிக்கச் செய்து எவ்வளவு பெரிய
காகிதமாக இருந்தாலும் 7 முறை தான் மடிக்க முடியும் என்பதை ஆணித்தரமாகக்
கூறினார். பரப்பு இழுவிசையை ஜம்ப் கிளிப்யை வைத்து எளிமையாக
புரியவைத்தார்.நீரின் மூலக்கூற்றை மாணவர்களையே உபகார்ணமாக பயன்படுத்தி எளிய
முறையில் உணர வைத்தார்.நீளத்திற்கு தகுந்தவாறு அதிர்வுகள் மாறுவதை ஸ்ட்ரா
வைத்து செய்து காட்டினார் .அந்துருண்டை,உருண்டை திராட்சை இவற்றை வைத்து
கரியமில வாயுவின் தன்மையை உணரச் செய்தார்.எந்த ஒரு செயலையும் சூழலுக்கு
ஏற்றவாறு,எப்படி மாற்றி யோசித்துச் சிந்தித்து செயல்பட வேண்டும்
என்பதையும்,வெறும் கையை வைத்தே அறிவியல் தொடர்பான நிறைய செயல்கள் செய்யலாம்
என்பதையும் எடுத்துக் கூறினார்.
இது
போன்று எத்தனையோ எளிய முறைகள்.காண்பதற்கு கவின் அழகு.கேட்பதற்கு மூளைக்கு
வேலை.நேரம் போனதே தெரியாமல் மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்முறைகளை பார்த்து
கற்றுக் கொண்டனர்.மாணவர்கள் முனீஸ்வரன்,மணிகண்டன்,மாணவிகள்
காயத்ரி,தனம்,பரமேஸ்வரி,மங்கையர்க்கரசி,கிர்ஷ்ணவேணி,சொர்ணம்பிகா ஆகியோர்
தங்கள் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர்.
இவ்வளவு நேரம் கற்றுக் கொண்டதை செயலில் செய்து பார்த்து,அறிவியல்
சிந்தனையை வளர்த்து,புதிது புதிதாக நாங்களே கண்டுபிடிக்க முன்வருவோம் என
மாணவ,மாணவியர் உறுதி எடுத்துக் கொண்டனர்.
கருத்தரங்கின் நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றிக் கூறினார்.
0 comments:
Post a Comment