தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இரத்தவகை கண்டறிதல் முகாம்
தேவகோட்டை ரோட்டாரி சங்கத்தின் சார்பாக தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம்
நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இரத்ததானம் பற்றிய
கருத்தரங்கமும், தன் மேம்பாட்டு பயிற்சியும், இரத்தவகை கண்டறிதல் முகாமும்
தேவகோட்டை ரோட்டாரி சங்கத் தலைவர் முனைவர் கரு.முருகன் தலைமையில்
நடைபெற்றது. சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியின் தலைமையாசியர்
எல்.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் . 8 ஆம் வகுப்பு மாணவி ர
.மங்கையற்கரசி வரவேற்புரை வழங்கினார் ;. இரத்ததானம் பற்றிய
விழிப்புணர்வு முகாமை தேவகோட்டை ரோட்டரி சங்க இரத்ததான தலைவர்
மருத்துவர் கா.செந்தில்குமார் அவர் கள் துவக்கி வைத்து மாணவிகளின்
கேள்விகளுக்கு பதிலளித்தும் சிறப்புரையாற்றினார் . தன்மேம்பாட்டுப்
பயிற்சியினை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர்
இரா.சந்திரமோகன் அவர்கள் சிறப்புரையுடன், சினேகபிரியா(8ஆம் வகுப்பு),
வசந்தகுமார் (7ஆம் வகுப்பு), சொர்ணாம்பிகா(8ஆம் வகுப்பு), காயத்ரி ,
கிருஷ்ணவேணி, மணிகண்டன், சமயபுரத்தாள், பரமேஸ்வரி ஆகிய மாணவ, மாணவியர்
“எனது இலக்கு” என்ற தலைப்பில் கருத்துரு வழங்கினர் . இரத்தவகை கண்டறிதல்
முகாமை தேவகோட்டை நறுமுகை மருத்துவமனை நிறுவன தலைவர் மருத்துவர்
கே.எஸ்.சுமதி அவர்களது தலைமையில் இரத்தவகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
நன்றியுரை 7ஆம் வகுப்பு மாணவி டி. தனம் கூறினார். விழாவில் சாகுல்ஹமீது,
மலையப்பன், மஸ்தான்கனி ஆகியோர் கலந்து கொண்டனார். முப்பெரும் விழாவை தேவகோட்டை ரோட்டாரி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
பட
விளக்கம் :0274 தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெறும் விழாவில்
மருத்துவர் செந்தில்குமார் விழாவில் பேசிய மாணவர்களுக்கு பரிசு
வழங்கினார்.உடன் ரோட்டரி சங்க தலைவர் முருகன்,கல்லுரி முதல்வர் சந்திர
மோகன் ,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.
பட விளக்கம் :0275 தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெறும் விழாவில் கல்லுரி முதல்வர் சந்திர
மோகன் விழாவில் பேசிய மாணவர்களுக்கு பரிசு
வழங்கினார்.உடன் ரோட்டரி சங்க தலைவர் முருகன், ,மருத்துவர் செந்தில்குமார்,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.
பட
விளக்கம் :0285,2906 தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றமுப்பெறும் விழாவில் இரத்த
வகை கண்டறிதல் நிகழ்ச்சியில் மாணவர் ஒருவருக்கு இரத்த வகை
கண்டறிந்தனர்.உடன் கல்லுரி முதல்வர் சந்திர
மோகன்,ரோட்டரி சங்க தலைவர் முருகன், மருத்துவர் செந்தில்குமார்,பள்ளி தலைமை
ஆசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.

0 comments:
Post a Comment