மாவட்ட அளவிலான கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சிறப்பிடம்
புகைப்படக் குறிப்பு
[பரிசு பெற்ற மாணவர்களுடன் ஆசிரியர் ரவிக்குமார், DR.சீனிவாசன் ( பெரியார் அறிவியல் மையம்,சென்னை), DR.அழகிரிசாமிராஜா (திட்ட இயக்குநர், கோவை மண்டல அறிவியல் மையம்),K.G.குமார்(இயக்குநர், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப மையம்,பெங்களூரு), DR.ஐயம்பெருமாள் (இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்,சென்னை) மற்றும் பள்ளியின் கணித ஆசிரியர் திருமுருகன்.]
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக கடந்த 07/12/2014 அன்று கோவை மண்டல அறிவியல் மையத்தில் கணித திறனறி போட்டி நடைபெற்றது. இதில் கோவை,ஈரோடு,பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் 560 மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கு பெற்ற மாணவர்கள் மிக மிக நன்று, மிக நன்று, நன்று என மூன்று பிரிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.
இதில் கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவிகள் சுபானு,காருண்யா (ஐந்தாம் வகுப்பு),கீர்த்தனா(ஆறாம் வகுப்பு),திவ்யதர்ஷினி(ஏழாம் வகுப்பு),மாணவர்கள் லோகேஸ்வரன், ஜவஹர்(எட்டாம் வகுப்பு) ஆகியோர் நன்று பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.
0 comments:
Post a Comment