கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறு சேமிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று [11-02-2015] மதியம் 2:00 மணியளவில் நடைபெற்றது. பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் திருமுருகன் வரவேற்புரை நல்கினார். முகாமில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பள்ளேபாளையம் கிளை மேலாளர் ஆனந்த சுபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேமிப்பின் அவசியம் பற்றி உரையாற்றினார். பின்னர் மாணவர்கள் சேமிப்புக் கணக்கு தொடர்பான சந்தேகங்களை கேட்க அதற்கு வங்கி மேலாளர் விளக்கமளித்தார்.சிறுசேமிப்பின் அவசியம் தொடர்பாக மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ரவிக்குமார் நன்றியுரை கூறினார். இப்பள்ளியைச் சேர்ந்த 6,7 மற்றும் 8 வகுப்புகளைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது.முகாமில் ஆசிரியைகள் அங்கையற்கண்ணி , பிரேமாள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Home » Unlabelled
0 comments:
Post a Comment