"முழு சுகாதார தமிழகம்" தொடர்பான ஒன்றிய அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில்கோவை மாவட்டம்-
மூலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.
மூலமாக"முழு சுகாதார தமிழகம்" எ ன்றஇயக்கத்தினை ஆரம்பித்து,
அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளி, இல்லம்மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக
வைத்துகொள்ளவும் மற்றும் சுத் தமான உணவு, குடிநீர் ,சுகாதாரமா ன
கழிப்பிடம் மற்றும் தன்சுத்தத் தின் முக்கியத்துவத்தை உணர்ந்து
கொள்வதற்காகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான ஓவிய ,பேச்சு ,
கட்டுரை போன்றபோட்டிகளை மத்தி ய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று(12-01-15) மேட்டுப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் மேட்டுப்பாளையம் வட்டார வள மையத்தில்நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேரும், தாம் கலந்து கொண்ட 5 போட்டிகளிலும் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பேச்சுப் போட்டி (6,7 &8 வகுப்புகள் பிரிவு)
முதலிடம்:செ.லோகேஸ்வரன்,எட்டா ம் வகுப்பு
கட்டுரைப் போட்டி (6,7 &8 வகுப்புகள் பிரிவு)
முதலிடம்: ந.ர.காவ்யா,ஏழாம் வகுப்பு
ஓவியப் போட்டி (6,7 &8 வகுப்புகள் பிரிவு)
இரண்டாமிடம்:ர.நவீன்,ஏழாம் வகுப்பு
பேச்சுப் போட்டி (4 &5 வகுப்புகள் பிரிவு)
இரண்டாமிடம்:வே.சீனிவாசன்,ஐந் தாம் வகுப்பு
ஓவியப் போட்டி (1,2 &3 வகுப்புகள் பிரிவு)
இரண்டாமிடம்:ர.விஜய்,மூன்றாம் வகுப்பு
பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் புத்தகங்களை பரிசளித்து பாராட்டினர்.
புகைப்படக் குறிப்பு:
பரிசு பெற்ற மாணவர்களுடன் பள்ளியின் ஆசிரியர்கள் (இடமிருந்து வலமாக) திருமுருகன், அங்கையற்கண்ணி, முனியம்மாள், தலைமையாசிரியை பத்திரம்மாள்,பிரேமாள்,அமுதா மற்றும் ரவிக்குமார்.
0 comments:
Post a Comment