மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கணித  நாள் விழா
   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “பள்ளி மாணாக்கர் கணித மன்றம்”  சார்பாக  கணித மேதை
இராமானுஜன் பிறந்த நாள் விழா தேசிய கணித நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமையாசிரியை பத்திரம்மாள் தலைமை தாங்கினார். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் இராமானுஜன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றி  ஆசிரியைகள் முனியம்மாள்,அமுதா மற்றும்  அங்கையற்கண்ணி ஆகியோர் பேசினர். ஆசிரியை பிரேமாள் நன்றி கூறினார்.
   மேலும் மாணாக்கர்களுக்கு “கணிதத் திறனறிவுத் தேர்வு” நடத்தப்பட்டது. கணித ஆசிரியர் திருமுருகன்  தேர்வை நடத்தினார். 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 50பேர் கலந்து கொண்ட இத்தேர்வில் எட்டாம் வகுப்பில் மாணவர் ஜவஹர் முதலிடமும்,ஏழாம் வகுப்பில் மாணவர் அருண்குமார் முதலிடமும்,ஆறாம் வகுப்பில் மாணவர் கோகுல் முதலிடமும் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இராமானுஜன் படம் பொறித்த கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
    இதனைத் தொடர்ந்து இராமானுஜன் எண்ணான 1729 ஐ நினைவு கூறும் விதமாக மாணவர்கள் மைதானத்தில் அணிவகுத்து அமர்ந்தனர்.
இராமானுஜத்திற்கு பிடித்த எண்ணான 1729இன் சிறப்பு
     தனது வாழ்க்கையில் நடைபெற்ற எல்லா விஷயங்களையும் எண்களாகவே பாவித்து வந்தார் ராமானுஜன் என்பதற்கு சுவையான ஒரு எடுத்துக்காட்டு .தாயகத்துக்கு வருவதற்கு முன் லண்டனில் நோயுற்று பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ராமானுஜன். அப்போது அவரைக் காண வந்த ஹார்டி, தான் வந்த வாடகை வண்டியின் எண் 1729 என்று இருந்ததைக் குறிப்பிட்டு அது தனக்கு நல்ல சகுனத்திற்கான அறிகுறியாக தெரியவில்லை என்று சொன்னவுடன், ராமானுஜன் “இது ஒரு சிறப்பான எண். இது இரண்டு எண்களின் கனத் தொகையினை இரண்டு வகையாக கூட்டினால் வரும் குறைந்த பட்ச எண்” என்றாராம். அதாவது “it is the smallest number expressible as the sum of two cubes in two different ways”
அதாவது…
1729 = 13 X 123  = (1  X  1  X  1) + (12  X  12  X 12)
1729 = 93 X 103 = (9  X 9 X  9) + (10  X 10  X 10)
கணித உலகில்1729 இராமானுஜன்  எண் என்றே அழைக்கப்படுகிறது.
   ஜெ.திருமுருகன்
கணித பட்டதாரி ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி,மூலத்துறை
கோவை மாவட்டம்



0 comments:

Post a Comment