சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்அஞ்சலக தேசிய வாரவிழாவினை முன்னிட்டு அஞ்சலக நடைமுறைகள்
பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு அஞ்சலகம் தொடர்பான நடைமுறைகள் அறிந்து கொள்ள தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஏற்பாடு செய்தார்.
தேவகோட்டை அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் சம்மதம் தெரிவித்தார்.
மாணவர்கள் பள்ளியிலிருந்து அஞ்சலகத்திற்கு சுற்றுலாவிற்கு பயணிப்பது போல்
உற்சாகத்துடன் அனைவரும் சென்றனர்.அஞ்சலக எழுத்தர் சத்யா அனைவரையும்
வரவேற்றார்.அஞ்சலக எழுத்தர் தன்ராஜ், அஞ்சலக அலுவலர்கள் செல்வகணேசன்,ஷேக்
அலாவுதீன் ஆகியோர் மாணவர்களுக்கு
செயல்முறை விளக்கம் அளித்தார்.
அஞ்சலகத்தின் செயல்பாடுகள் என்ன,என்ன என்பது குறித்து விளக்கப்பட்டது.
அஞ்சலகத்தில் பொதுமக்கள் பயன்பாடும்,பொதுமக்களுக்கு அஞ்சலகத்தின் சேவை குறித்தும் எடுத்து
கூறினார்கள் .அஞ்சலகத்தில் அமைந்து உள்ள ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியே
மாணவர்களை
அழைத்து சென்று விளக்கம் அளித்தார்.தபால்கள் பிரிப்பது எப்படி? தபால்கள்
உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு வீடுகளுக்கு சென்றடைவது எப்படி? அஞ்சல்
அட்டை, உள்நாட்டு தபால் சேவை, ஒப்புதல் அட்டை, மணி
ஆர்டர் படிவம் பூர்த்தி செய்வது எப்படி? பணம் செலுத்தும் படிவம்,பணம்
எடுக்கும்
படிவம்,ஆகியவை பூர்த்தி செய்வது எப்படி? பதிவு தபால் என்ன என்பது
தொடர்பாகவும்,பதிவு தபாலுக்கும் ,விரைவு தபாலுக்கும் என்ன வேறுபாடு
என்பதையும் விளக்கமாக எடுத்து கூறினார்கள் .
அஞ்சலகத்தின் முக்கிய சேவைகளாக உள்ள இ - போஸ்ட் ,முக்கிய நகரங்களுக்கு
பொது மக்கள்
தங்களது சரக்குகளை குறைந்த விலையில் அனுப்பி வைக்கப்படும் தபால் சேவை,
உள்நாட்டில் பண பரிமாற்ற சேவை,வெளிநாடுகளுக்கு தபால்கள்,பார்சல்கள் அனுப்ப
அறிமுகம் செய்யப்பட்டுள்ள world net express சேவை,Mobile Money System,IMO
என பல தகவல்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.மை ஸ்டாம்ப்,பணம் செலுத்தும்
கவுன்ட்டர் ,பார்கோடு மூலம் கணினியில் எவ்வாறு பதிவு செய்தல் என்பதையும்
செயல் விளக்கம் அளித்தனர். மாணவி சொர்ணம்பிகா,கிருஷ்ணவேணி,மாணவர் கள் சூர்யா ,நடராஜன்,ராம்குமார்,பார்த்திபன ், ஆகியோர் படிவங்கள்
பூர்த்தி செய்வது தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.சில மணி
நேரங்கள் மாணவ,மாணவியர் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.மாணவர்களை அழைத்து
செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் மற்றும் ஆசிரியர்
ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தார்கள்.நிறைவாக பள்ளியின் சார்பாக ஆசிரியை முத்துலெட்சுமி
நன்றி கூறினார்.
பட விளக்கம
:-IMG-2408,2416 தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக தலைமை அதிகாரி
ராமசந்திரன் அஞ்சலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.உடன் பள்ளி தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம :IMG_2425,2431
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக
தலைமை அதிகாரி ராமசந்திரன் அஞ்சலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
பட விளக்கம் :IMG-2455,2456
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக
எழுத்தர் தன்ராஜ் அஞ்சலக நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
0 comments:
Post a Comment