சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா





                                        சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதற்கு  பாராட்டு விழா நடைபெற்றது.
                       
                                                                   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ஸ்ரீ நித்திய கல்யாணிபுரத்தில் அமைந்திருக்கும் சௌபாக்கிய துர்க்கை அம்மன் ஆலயத்தில்  நடைபெற்ற சரஸ்வதி அந்தாதி ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.எட்டாம் வகுப்பு பிரிவில் சொர்ணம்பிகா முதல் பரிசையும் ,பூஜா மூன்றாம் பரிசையும்,ஏழாம் வகுப்பு பிரிவில் ஆகாஸ் குமார் ,ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு பிரிவில் தனலெட்சுமி ஆகியோர் மூன்றாம் பரிசையும்,3 மற்றும் 4ம் வகுப்புகள் பிரிவில் காயத்ரி,1 மற்றும் 2ம் வகுப்பில் கிஷோர்குமார் ஆகியோர் ஆறுதல் பரிசையும் பெற்றனர்.வெற்றிபெற்று பரிசு பெற்றவர்களை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்,ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள்  செய்திருந்தார்.

பட விளக்கம்: சரஸ்வதி அந்தாதி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  பள்ளி வழிபாட்டு கூட்டதில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment