சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு
அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி இளங்கோ பள்ளி மாணவ-மாணவிகள் எப்படி தீபாவளி
பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்? என்பது
குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார்..மேலும் பட்டாசு வெடிக்கும்
போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? என்பதையும் விளக்கி சொன்னார்..
பின்னர் விழாவில் தீயணைப்பு அதிகாரி இளங்கோ பேசியதாவது:-சீன பட்டாசு
வேண்டாம்.பள்ளி மாணவ-மாணவிகள்
மற்றும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின்
மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கி
தரவேண்டாம். மாணவர்கள் அப்துல்கலாம் சொன்னது போல பெரிய அளவில் கனவு காண
வேண்டும். அப்போதுதான் நம் இந்தியாவுக்கு அப்துல்கலாம் போன்ற பல
விஞ்ஞானிகள் உருவாக முடியும்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் தீ காயங்களின்
வகைகளையும் ,தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக
எடுத்து கூறினார்.பின்னர் பள்ளி
மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
துண்டு பிரசுரங்களை தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த பாலமுருகன் வழங்கினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு
அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
0 comments:
Post a Comment