தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு சேவுகன் அண்ணாமலை க ல்லூரி விழாவில் பாராட்டு
சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேவகோட்டை
சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும்
விழாவில் பங்கேற்று நிகழ்ச்சிகள் நடத்தினர்.
தேவகோட்டை
சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை சார்பாக
முப்பெரும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் தொடக்கமாக அபிராமி
அந்தாதி 20 பாடல்கள் அருமையாக பாடினார்கள்.அரங்கம் நிறைந்த
வாழ்த்துக்களையும் பெற்றனர்.நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் திரு.அ
.சுந்தரமகாலிங்கம் அவர்களின் நிகழ்ச்சியின் தொடக்கமாக சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் சில திருக்குறள் பாடல்களுக்கு நடனம் ஆடி
காட்டினார்கள்.திருக்குறள் பாடல்களை இசையோடு மாணவர்கள் முன்பு சந்தத்துடன்
பாடி காண்பித்தனர்.விழாவில் கலந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம்,ஓய்வு பெற்ற கரூர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியரும்,நடனமாடி
திருக்குறள் கற்பிக்கும் திரு.அ .சுந்தரமாஹலிங்கம் ஆகியோர் பாராட்ட
பெற்றனர்.கல்லூரியின் நிர்வாகத்தின் துணை தலைவர் திரு.A .S .சேவுகன்
செட்டியார் அவர்களும்,அவர்களது துணைவியார் திருமதி.சாந்தி ஆச்சி
அவர்களும்,கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன்,தமிழ்த்துறை தலைவர்
திரு.மாரிமுத்து,பேரா .கண்ணதாசன், பேரா.கண்மணி,ஓய்வு பெற்ற கணித துறை பேரா
.திரு.சுப்பையா,அரங்கத்தில் குழுமியிரிந்த 100 க்கும் மேற்பட்ட தமிழ் துறை
மாணவ,மாணவிகள் அனைவரும் விழாவில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள்
சொர்ணம்பிகா,மங்கையர்க்கரசி,சௌமியா ,பூஜா,சமயபுரத்தாள்,தனம்,சுமித்ரா
ஆகியோருக்கும் பயற்சி கொடுத்த ஆசிரியர்கள் செல்வ மீனாள் ,முத்து மீனாள்
ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment