மத்திய அரசு போட்டியில் பள்ளி அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு


      
       சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மத்திய அரசு  நடத்திய கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
   
             மத்திய அரசு  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியை அறிவித்திருந்தது.ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இப்போட்டியில் பள்ளி அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியினை அறிவித்து நடத்தி முடித்தது .இப்போட்டியானது ஆன்லைன் மூலமாகவே அனைத்தும் அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
 
            அதன்படி முக நூல் மூலமாக போட்டிக்கான தலைப்புகள் வழங்கப்பட்டது.கட்டுரையை தமிழிலேயே எழுதலாம்   எனவும் ,குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் போட்டியை நடத்தி முடித்து அதனை ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
             போட்டி துவங்குவதற்கு முன்பாக தலைப்புகள் முகநூல் மூலமாக தெரிவிக்கப்பட்டது.போட்டிக்கான பெயர் பதிவும் ஆன்லைன்  மூலமாகவே இரண்டு நாட்களுக்கு முன்பாக பதிய சொல்லி முகநூலில் அறிவிப்பு வெளியானது.அதை வெற்றிகமாக முடித்து,போட்டிகளும் 1 முதல் 5 வகுப்பு வரையில் என் ஆசிரியர் என்னை பாராட்டிய அந்த நாள் என்ற தலைப்பிலும்,6 முதல் 8 வகுப்பு வரையில் எனக்கு ஒரு மிகசிறந்த ஆசிரியர் அமைந்த அந்த ஆண்டு என்ற தலைப்பிலும் நடைபெற்றது.பள்ளி அளவில் 1 முதல் 5 வகுப்பு வரை ஆறு மாணவ,மாணவியரும் ,6 முதல் 8 வகுப்பு வரை ஆறு மாணவ,மாணவியரும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட  மாணவ,மாணவியர்க்கும் ,போட்டிகளை நடத்திய ஆசிரியை முத்துமீனாளுக்கும்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர் அனைவரும்  பாராட்டு தெரிவித்தனர்.

              பட விளக்கம்: மத்திய அரசு  ஆசிரியர் தினத்தை முன்னிட்டு  நடத்திய கட்டுரை போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு கட்டுரை எழுதினார்கள்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.


0 comments:

Post a Comment