சுட்டி விகடன்
நடத்திய FA செயல் திட்டம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி
விகடனனின் சான்றிதள் வழங்குதல் மற்றும் பாராட்டு விழா
சிவகங்கை
மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி
விகடன் சார்பாக 2014-மார்ச் மாதம் நடைபெற்ற FA செயல் திட்டம் போட்டியில்
பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடனனின் சான்றிதள் வழங்கி பாராட்டுதல்
விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
சுட்டி விகடன் நடத்திய செயல் திட்டம் FA போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக
தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும்,அவர்களை ஊக்கபடுத்திய
ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு
தெரிவித்தார்.மாணவிகள் பா .கிருத்திகா ,மு.கீர்த்தியா
,ப.கேசினி,மு.தனலட்சுமி ,தி.தனம்,நா.கிர்ஷ்ணவேணி ,சி .காயத்ரி,மாணவர்கள்
வீ.சக்திவேல்,பெ.ஐயப்பன்,சு. அஜய்
பிரகாஷ்,மு.விக்னேஷ்,தி.ரஞ்சித் ,வி.வசந்தகுமார்,ம.சுரியப்ரகாஷ் ,மு.பரத்குமார்
போன்ற மாணவர்களையும்,இவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியைகள்
திருமதி.முத்துலெட்சுமி,முத்து மீனாள் ,சாந்தி,செல்வ மீனாள்
,வாசுகி,ஆகியோரையும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டி வாழ்த்து
தெரிவித்தார்.
சுட்டி விகடன் சார்பாக பள்ளிக்கு சுமார் 1100 ரூபாய் மதிப்புள்ள விகடன்
இயர் புக்,உன்னோடு ஒரு நிமிஷம்,ஆங்கில இலக்கணம் ஆறாம் துணை உட்பட 4
புத்தகங்களும் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ்கள் மற்றும் புத்தங்கங்கள் வழங்கிய சுட்டி விகடன் ஆசிரியர்
மற்றும் நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றி
தெரிவிக்கபட்டது .
0 comments:
Post a Comment