தன்னம்பிக்கை - கவிதை




துக்கத்தின் தூக்குக்கயிறு
உன் வாழ்வின் கழித்தை
இறுக்குகிறதா...?
இடிந்து போகாதே
உன் இதயத்தின்
அரண்மனையில்
நன்றாகத் தேடிப்பார்
எந்குகேயாவது ஒளிந்திருக்கும்
உன் தன்னம்பிக்கை வாள்
அந்த வாளை கையிலெடுத்து
துக்கக் கயிற்றின் கழித்தறுத்து
உன் வாழ்வை நிலை நிறுத்து
முயற்சியை முன் வைத்து
முதன்மையாய் நீ உழைத்து
நம் மானுட வாழ்வில்
புது நம்பிக்கையை
நீ புகுத்து!
நல் வழ்வின்
வழிமுறையை வகுத்து
உன்னால் பிறருக்கு
ஒளி தரும் கிழக்கு
உன் தன்னம்பிக்கை
மற்றவர்க்கும் உதாரணம்
உன் தன்னம்பிக்கைக்கு முன்
மற்ற அனைத்து தடைகளுமே
சாதாரணம்!
- தி ரம்யா

0 comments:

Post a Comment