முடிவுகளில் அசத்திய மாணவர்கள்
பயிற்சி முகாமில் தன்னம்பிக்கையான முடிவினை சொல்லி அசத்திய ஆறாம் வகுப்பு மாணவர் கோட்டையன் : பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் இது குறித்து கூறியதாவது : பயிற்சி அளித்த ரெங்கராஜன் மாணவர்களிடம் உனது நண்பன் உன்னை பள்ளிக்கு கட்டடித்து விட்டு வந்து சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டதற்கு , முதல் ஆளாக கோட்டையன் என்ற மாணவர் ,நான் எனது நண்பனிடம் இருந்து நைசாக பேசிவிட்டு,வீட்டுக்கு சென்று சட்டை மாற்றி வருவதாக சொல்லி சென்று விடுவேன்.நண்பன் சினிமாவுக்கு சென்று விடுவான்.பிறகு நான் பள்ளிக்கு வந்து விடுவேன் என்று சொன்னார் கோட்டையன் . பயிற்சியாளர் அவரிடம் மீண்டும் ,உனது ஆருயிர் நண்பர்,அவர் படத்துக்கு வா என்று சொல்லும்போது என்ன செய்வாய் என்று கேட்டார்,அதற்கு கோட்டையன் சொன்ன பதில்தான் நச் பதில் ,எனது நண்பனிடம் உனது நட்பு வேண்டாம்,நான் பள்ளிக்குத்தான் செல்வேன் என்று சொன்னார். அந்த முடிவைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.அந்த அருமையான முடிவினை தன்னம்பிக்கையுடன் சொன்ன ஆறாம் வகுப்பு மாணவர் கோட்டையன் மறக்க முடியாத மாணவர்.
நச் என்று பதில் சொன்ன எட்டாம் வகுப்பு மாணவி : பயிற்சியாளர் வாழ்வியல் பயிற்சி குறித்தும் ,நல்ல தொடுதல் ,கெட்ட தொடுதல் குறித்தும் பல்வேறு சூழ்நிலைகளை விளக்கி சொல்லும்போது ,மாணவர்களை பார்த்து ,உங்களுக்கு நெருங்கிய சொந்தத்தில் உள்ள ஒருவர் உங்களை பெயர் சொல்லி அழைப்பதற்கு பதில் உங்களை தொட்டு அழைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு,எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெனிபர் உடன் எழுந்து என்னை தொடாமல் பேசுங்கள் என்று தன்னம்பிக்கையுடன் ,தைரியமாக சொல்வேன் என்று சொன்னார்.இந்த தன்னம்பிக்கையனை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.
பயிற்சியாளர் ரெங்கராஜ் மாணவர்களிடம் விளையாட்டு முறையில் அவர்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பாக எடுத்துக்கூறினார்.மாணவர்களும் மிக எளிதாக ஓடி,ஆடி அதனை கற்று கொண்டார்கள் .பெற்றோரிடமும் மாணவர்களின் மனநிலைகள் தொடர்பாக எடுத்து கூறினார்.பொய் சொல்லாது இருத்தல்,தினமும் மாணவர்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து சொல்லுதல்,தொலைக்காட்சி பேட்டி முன்பாக தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்து நேரத்தை வீணடித்தல் போன்ற பொதுவான பிரச்சனைகள் குறித்து விளக்கினார்.
பயிற்சி குறித்து மாணவர்கள் கூறியதாவது :
மாணவி காயத்ரி : எங்களது இலக்குகளை எங்கள் வாயால் கேட்டு அதனை அடையும் வழிமுறைகள் என்ன,என்ன என்று தெளிவாக கூறினார்.நாங்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளை எங்களுக்கு எடுத்து சொன்னார்.எங்கள் நண்பர்களின் வழியாக சில நேரங்களில் குழப்பமான முடிவுகள் ஏற்படும்போது எப்படி சரியான முடிவுகள் எடுப்பது என்பதை சில சூழ்நிலைகளின் வழியாக பயிற்சியாளர்சொல்லி கொடுத்தார்.வாழ்க்கையில் தன்னம்பிகையுடன் வாழ்வதற்கு அருமையான பயிற்சி இது என்று பேசினார்.
மாணவர் கிஷோர்குமார் : எனது அம்மாவும் இந்த பயிற்சிக்கு வந்து இருந்தார்கள்.நான் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பேன்.இந்த சார் சொன்ன விஷயங்கள் வழியாக நான் இனிமேல் தொலைக்காட்சியில் செய்தி மட்டுமே பார்ப்பேன்.எனது அம்மாவிடம் தினமும் பள்ளி முடிந்து சென்று பள்ளியில் நடந்த அனைத்து விஷயங்களையும் பேசுவேன் என்று சொன்னார்.
மாணவி ஜெனிபர் : இன்று நடந்த இந்த பயிற்சியின் வழியாக நான் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டேன்.நல்ல தொடுதல்,கெட்ட தொடுதல் தொடர்பாக தெளிவாக தெரிந்து கொண்டேன்.தவறான தொடுதல் இருந்தால் அவர்களை எவ்வாறு தன்னம்பிகையுடன் எதிர் கொள்ள வேண்டும் எனபதை தெரிந்து கொண்டேன்.என்னுடைய இலக்கை நோக்கி நான் எவ்வாறு செல்வது என்பது குறித்தும் அறிந்து கொண்டேன்.இவ்வாறு பேசினார்.
பயிற்சியில் பேசிய மாணவரின் பெற்றோர் மஹேஸ்வரி :
வாழ்வியலில் என்ன முக்கியமான செய்திகளோ அதனை நல்ல முறையில் எடுத்த சொல்லி உள்ளனர்.முக்கியமாக பெற்றோரிடம் பிள்ளைகள் நன்றாக பேச வேண்டும் என்று சொல்லி கொடுத்து உள்ளனர்.இதனை நான் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் சொல்வேன்.பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசினாலே மாணவர்களின் அனைத்து விதமான பதட்டங்களும் குறைந்து விடும்.தொலைக்காட்சி பார்ப்பதன் கெடுதல்களை மிக அழகாக பயிற்சியாளர் மாணவர்களுக்கு புரியும்வண்ணம் எடுத்துரைத்தார். இது போன்ற பயிற்சிகளின் வழியாக எங்களுக்கும்,மாணவர்களுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படுகிறது.நாங்கள் என்ன செய்யவேண்டும்,எங்கள் பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.
பயிற்சி குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் : பயிற்சி அளிக்க வந்துள்ள பயிற்சியாளர் ரெங்கராஜ் திண்டுக்கல் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புனர்வு பயிற்சியில் இவரை சந்தித்தேன்.இவரது வாழ்வியல் பயிற்சி மிக அருமை.இதனை உலக எய்ட்ஸ் தினத்தன்று மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க முயற்சிகள் எடுத்து எல்லாம் செய்யும்போது மழை காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து ஒரு வழியாக பயிற்சி அளித்தோம்.
பயிற்சியாளர் மாணவர்களிடம் ,நீங்கள் உங்கள் பெற்றோரிடம் பள்ளி முடிந்து சென்று பேசுவீர்களா என்று கேட்டபோது,பல மாணவர்கள் பேசுவதில்லை என்று சொன்னார்கள்.பெற்றோர் பேசுவார்களா என்று கேட்டதற்கு அதற்கும் பேச மாட்டார்கள் என்று சொன்னர்கள்.அப்போது நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை பார்த்து ஏன் நீ உங்கள் அம்மாவிடம் பள்ளி முடிந்து சென்று பேசுவதில்லை என்று கேட்கும்போது ,அந்த மாணவர் சொன்ன பதில் எங்களை திகைக்க வைத்தது: பள்ளி முடிந்து சென்றதும் எனது அம்மாவிடம் சென்று பேச செல்வேன்.எனது அம்மாவோ வேளையாக இருக்கிறேன் என்று சொல்லி என்னை அனுப்பி விடுவார்.அப்பாவோ இரவு தான் வீடு வருவார்.அவர் வரும்போது நான் தூங்கி விடுவேன் என்று வருத்தத்துடன் சொன்னார்.அந்த பிஞ்சு உள்ளத்தின் மன நிலையை பாருங்கள் .வாழ்வியல் திறன்கள் பத்து தொடர்பாக பயிற்சியாளர் மாணவர்களிடம் தெளிவாக விளக்கினார்.பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடாமல் அவர்களே வாழ்க்கையில் தெளிவான முடிவு எடுக்கும் வகையில் இந்த பயிற்சி முகாம் அமைந்தது.
இது போன்று மாணவ பருவத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும் விதத்தில் தான் இந்த வாழ்வியல் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தோம்.நிச்சயமாக இது எங்கள் மாணவர்களுக்கும்,வந்து பங்கு கொண்ட பெற்றோர்க்கும் நல்ல நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.இவ்வாறு தலைமை ஆசிரியர் சொன்னார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாழ்வியல் பயிற்சியில் நடைபெற்ற சுவையான நிகழ்வுகள் இவை.

0 comments:
Post a Comment