வாய் விட்டு சிரித்தால் வாழ்நாள் வளரும் 
  குடியரசு தின விழாவில் எல்.ஐ.சி .வளர்ச்சி அதிகாரிபேச்சு 




சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.8-ம் வகுப்பு மாணவர் நவீன் குமார் வரவேற்றார்.
                             தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை எல்.ஐ.சி .வளர்ச்சி அதிகாரி சே.பெரியசாமி கொடிஏற்றிவைத்துப் பேசினார்.வாய் விட்டு சிரித்தால் வாழ்நாள் வளரும்.மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்களை எடுத்துக்கொண்டு அதனை அடைய விடா முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
      விழாவில் மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிறைவாக 7-ம் வகுப்பு மாணவி தனம் நன்றி கூறினார் .ஆசிரியை முத்து மீனாள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் .

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எல்.ஐ.சி .வளர்ச்சி அதிகாரி சே.பெரியசாமி மாணவிக்கு பரிசு வழங்குகிறார்.உடன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் எல்.ஐ.சி .வளர்ச்சி அதிகாரி சே.பெரியசாமி கொடிஎற்றினார் .உடன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

0 comments:

Post a Comment