தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் மாணவர்களுடன் கோட்டாட்சியர் கலந்துரையாடல்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில் வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும் உணர்வு வரவேண்டும் என தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்துகொண்டோரை பள்ளியின் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை கோட்டாட்சியர் (ஆர் .டி.ஒ ) சிதம்பரம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டாட்சியர் ராஜேந்திரன் ,துணை -வட்டாட்சியர் தேர்தல் சேது நம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோட்டாட்சியர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.அடிப்படை கடமைகளில் ஒன்றான வாக்களித்தலை செயல்படுத்துவதற்காக இதுப் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.சுலபமான பதிவு,சுலபமான திருத்த முறைகள் மற்றும் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பு,மிக முக்கியமாக பிழையில்லா வாக்காளர் பட்டியல் பராமரிப்பது உள்ளிட்டவை தினத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளன .மாணவர்களாகிய நீங்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்க உள்ளீர்கள்.நீங்கள் பெரியவர்களான பிறகு கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.அதற்காகத்தான் நமது அரசு தேசிய வாக்காளர் தினத்தை பள்ளிகளில் கொண்டாடுகிறது.நீங்கள் அனைவரும் உங்கள் அப்பா,அம்மாவிடம் சொல்லி கட்டாயம் வாக்களிக்க சொல்லுங்கள் என அறிவுரை வழங்கினார் .மாணவர்கள் ராஜேஸ்வரன்,நடராஜன் ,மாணவிகள் மங்கையர்க்கரசி,தனலெட்சுமி ஆகியோர் வாக்களிப்பது,கள்ள ஒட்டு,ஒட்டு அளிக்கும் முறை தொடர்பாக கோட்டாட்சியரிடம் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.விழாவில் மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பட விளக்கம்;IMG:4065,4066 தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில்தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரங்கோலி போட்டியில் பரிசுக்குரியவர்களை தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் ,வட்டாட்சியர் ராஜேந்திரன் ,துணை வட்டாட்சியர் (தேர்தல் ) சேது நம்பு ஆகியோர் தேர்வு செய்தனர்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம்;IMG:4109 தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில்தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். உடன் வட்டாட்சியர் ராஜேந்திரன் ,துணை வட்டாட்சியர் (தேர்தல் ) சேது நம்பு ,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
பட விளக்கம்; IMG:4112 தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளயில்தேசிய வாக்காளர் தினத்தை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் ,வட்டாட்சியர் ராஜேந்திரன் ,துணை வட்டாட்சியர் (தேர்தல் ) சேது நம்பு , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் பெற்றோர்,ஆசிரியர் ,மற்றும் பள்ளி மாணவ,மாணவியருடன் வாக்காளர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் .
0 comments:
Post a Comment