வங்கி-சில தகவல்கள்

           பாங்கோ" என்ற இத்தாலிய சொல்லிலிருந்துதன் "பாங்க்" பிறந்தது. இது தமிழில் 'வங்கி' என வழங்கப்படுகிறது. உலகின் முதல் முதலாக தோன்றிய வங்கியின் பெயர் 'பாங்கோ டிரிவால்டா'  என்பதாகும்.


         அந்த வங்கி 1587ஆம் ஆண்டில் வெனிஸ் நகரில் தொடங்கியது.1782ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் வங்கி 'பிலடெல்பியா' என்னும் பெயரில் தொடங்கியது. இந்தியாவின் முதல் வங்கி மும்பையில் 1804ஆம் ஆண்டு 'பிரசிடென்சி பாங்க் ஆஃப் பாம்பே' என்னும் பெயரில் நிறுவப்பட்டது. இந்தியர்களாலேயே நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் வங்கி'பஞ்சாப் நேஷனல் பேங்க்' ஆகும். அது 1894ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. இந்தியாவில் 'ரிசர்வ் வங்கி' 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.அவற்றுள் 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா' 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.


-"உலகில் முதல் முதலில்......" புத்தகத்திலிருந்து
                           சு.ஜனார்த்தனா
                         எட்டாம் வகுப்பு
                      ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
                      மூலத்துறை.
                    கோவை மாவட்டம்

0 comments:

Post a Comment