வேறென்ன செய்வார் இன்றைய உண்மை உழவர்?

      
        கதிரவனோடு கவலைகளும் உதித்தன
         மோழி பிடித்து வேர்வை வழித்து
          மிச்சமிருந்த நம்பிக்கையோடு கொஞ்சம்
                   விதைநெல்லையும் சேர்த்து விதைத்தார்
          காத்திருந்த கஞ்சியால் பாதிவயிறு நிரப்பினார்
          கடன்கொடுத்தோர் வந்திட்டார் அவர் 
          கண்ணிலும் வாயிலும் கக்கிய கனலிடைப்
          புழுவாய்க் கதறித் தவித்தார் துடித்தார்
          கட்டியிருந்த மாட்டை அவிழ்த்துக் கொடுத்துவிட்டு
          வெட்டிய மரம்போல் விழுந்தழுதார் வேறென்ன
          செய்வார் இன்றைய உண்மை உழவர்?

0 comments:

Post a Comment