தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பொறியியல்
கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றல் மற்றும்
பார்வையிடல்
குறிப்பு : தொடக்க மற்றும் நடு நிலையில் உள்ள பள்ளிகளில் குறிப்பாக அரசு உதவி மற்றும்
அரசு பள்ளிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
மட்டுமே கலந்து கொண்டது பாராட்டதக்கது
வீட்டுக்கு
ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் காரைக்குடி அருகில் உள்ள அமராவதி புதூர் ஸ்ரீ
ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் இன்று (7/8/2014) நடைபெற்ற அறிவியில்
கண்காட்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
மாணவ,மாணவியர் 10 பேர் பங்கேற்றனர்.
7 வகையான அறிவியல்
தொடர்பான விசயங்களை பார்வையாளர்களுக்கு எடுத்து கூறினார்கள். .மேலும்
பள்ளியில் 5,6,7,8 வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும்
இக்கண்காட்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர்.ஸ்ரீ ராஜ ராஜன்
பொறியியல் கல்லூரியின் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் அனைத்து
மாணவ,மாணவிகளுக்கும் இந்த வாய்ப்பின் மூலம் ஏரளாமான அறிவியல் வாய்ப்புகளை
நேரடி டியல் செயல் மூலம் கண்டதுடன் தாங்களும் பிற்காலத்தில் இது போன்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டும் என்ற எண்ணமும்,அதனை தொடர்ந்து
உறுதியும் எடுத்து கொண்டனர்.இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த கல்லுரி
நிர்வாகத்துக்கு நன்றி.மாணவ,மாணவிகளை நல்ல முறையில் இந்த அறிவியல்
கண்காட்சியில் பங்கெடுக்க வைத்த ஆசிரியை முத்து மீனாள்
அவர்களுக்கும்,மாணவ,மாணவிகளை சரியான முறையில் வழிநடத்தி அழைத்து சென்ற
ஆசிரியர் ஸ்ரீதர்,ஆசிரியைகள் முத்துலெட்சுமி,கலாவல்லி ஆகியோருக்கும்
பள்ளியின் தலைமை ஆசிரயர் லெ .சொக்கலிங்கம் வாழ்த்து தெரிவித்தார்.கலந்து
கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஷீல்டும்,பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும்
வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment