கோவை மாவட்டம்,மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் "உடல் நலச் சங்கம்"[HEALTH CLUB] சார்பாக இதய நோய்கள்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் வராதவாறு தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுக் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு...
*சர்க்கரை நோய் விழிப்புணர்வு
*இதயம் காப்போம்
*மூலிகைகளும் அதன் பயன்களும்
*புகை பிடித்தலின் தீமைகள்
*சரிவிகித உணவு
*உணவே மருந்து
*முளை கட்டிய தானியங்களின் மகத்துவம்
*புற்று நோய்-காரணங்களும் தடுக்கும் முறைகளும்
ஆகிய தலைப்புகளில் மனவரைபடங்கள் வரைந்து அவற்றிக்கான விளக்கங்களைத் தொகுத்தனர். இந்த மனவரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடல் நலச் சங்க உறுப்பினர்கள் தாங்கள் வரைந்த மனவரைபடங்களின் துணை கொண்டு கருத்துக்களை விளக்கினர்.
0 comments:
Post a Comment