மூலத்துறை PUMS மாணவன் பேச்சுப்போட்டியில் இரண்டாமிடம்

          கோவையைச் சேர்ந்த “நிழல் மையம்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவில் ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி ஆகியவற்றை கவுண்டம்பாளையத்தில் நடத்தியது. 

      அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசளிப்பு விழா கவுண்டம்பாளையம் காளியப்பா திருமண மண்டபத்தில் நேற்று (06-07-14) நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவன் செ.லோகேஸ்வரன் பேச்சுப்போட்டியில் இரண்டாமிடத்தை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான். வெற்றி பெற்ற மாணவன்  லோகேஸ்வரனை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாணவர்கள் தொகுத்த கட்டுரைகள்

குப்பை மேனிக் கீரையின் மருத்துவக் குணங்கள்
    இக்கீரையில் பல தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.தீராத தலைவலி மற்றும் விஷக்கடி போன்ற நோய்களுக்கு இக்கீரையை கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.இக்கீரை சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை ஆகும்.குடல் புழுக்களை ஒழிக்க இக்கீரையை சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.தேள்கடியின் வலியைக் குறைக்கவும் இக்கீரையின் சாறு பயன்படுகிறது.தோல் நோய்களை போக்கவும் இக்கீரை உதவும்.

உடல் நலம் தரும் கீரைகள் புத்தகத்திலிருந்து....
ப.சுபாஷ்
எட்டாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
மூலத்துறை
 
சுதந்திர தேவி சிலை வந்த விதம்
  நண்பர்கள் ஒருவருக்கொருவர் பரிசு கொடுப்பது வழக்கம்.ஆனால் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு நட்புக்கு அடையாளமாய்ப் பரிசு கொடுத்திருக்கிறது.அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசுதான் சுதந்திர தேவி சிலை.
   அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் துறைமுகத்தில் இருக்கிறது லிபர்ட்டி தீவு.இந்த தீவில்தான் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமான  சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது.
   இந்த சிலையை உருவாக்கியவர் பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி. இவருடன் குஸ்டவ் ஈபிள் என்பவரும் வடிவமைப்பில் உதவி செய்திருக்கிறார்.இவர் ஈபிள் கோபுரத்தை உருவாக்கியவர்.
   1875ஆம் ஆண்டு சிலை கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது.1884ஆம் ஆண்டு சிலை  அடைந்தது.பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.1886ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது.
  சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது.இடது கையில் ஜூலை 4,1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போர் சரித்திரத்தை குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது. இந்த 7 முனைகள் 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன.

தெரியுமா உங்களுக்கு...புத்தகத்திலிருந்து தொகுத்தவர்
பா.தனுஷ்
எட்டாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
மூலத்துறை
 
இரவுகளில் வெப்பம் அதிகமாக இருக்க காரணம்
வானம் தெளிவாக இருக்கும் இரவுகளை விட மேக மூட்டமுள்ள இரவுகளில் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும்.இதற்கு காரணம் என்ன தெரியுமா?... பூமி வெளிப்படுத்தும் வெப்பம் வானத்தை அடைய முடியாமல் மேக மூட்டம் தடுத்துவிடுவதுதான்.இதன் காரணமாகத்தான் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக வெப்பம் காணப்படுகிறது.
"அதிசய உலகம்" புத்தகத்திலிருந்து தொகுத்தவர்...
ரா.சத்யகாந்த்
எட்டாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
மூலத்துறை
 
 

0 comments:

Post a Comment