எல்லாம் பொங்குக!
மஞசள் கொத்துடன் இனைந்து மங்களமாய்ப் பொங்குக
கரும்புடன் இனைந்து இனித்துப் பொங்குக
பச்சரிசிப் பல்லழகாய்ப் பளிச்சென சிரித்துப் பொங்குக
வெல்லமாய் இனித்து தித்திக்கப் பொங்குக
முந்திhpயாய் ராஜதந்திhpயாய் முனைந்து புத்துப் பொங்குக
திராட்சையாய் சுவைபட சத்துடனே பொங்குக
ஏலக்காய் நறுமணமாய் நல் மனத்துடன் பொங்குக
பாசிப் பருப்புடன்; பாசமாய்ப் பொங்குக
அக்கம் பக்கம் சேர்த்து உற்சாகமாய்ப் பொங்குக
எண்ணிய எண்ணியாங்கு நிறைவேற இன்முகமாய்ப் பொங்குக
கு. ஸ்டீபன் ஜெயராஜ்
பட்டதாhp ஆங்கில ஆசிhpயர்
அரசு உயர்நிலைப் பள்ளி
தினைக்காத்தான் வயல்
திருவாடானை வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்.
0 comments:
Post a Comment