ஒளவையார் அருளிய செய்த இந்த அறிய தமிழ் பொன்மொழிகளை குறைந்த பட்சம் நமது குழந்தைகளை
அறிய செய்வதன் மூலம் தாய்மொழி ,தமிழ், ,அவர்களுக்கு அடிப்படை அறிவு பெருகும் என்பது திண்ணம் மறந்து விடாதிர் !!!!!!!!!!இக்கால
குழந்தைகளுக்கு அவசியம் அவசியம் ......
1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல்.
19. இணக்கமறிந் திணங்கு.
20. தந்தைதாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மண்பறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.
25. அரவ மாட்டேல்.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகலா தனசெயேல்.
29. இளமையிற் கல்.
30. அறனை மறவேல்.
31. அனந்த லாடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப் படவாழ்.
35. கீழ்மை யகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்ப தொழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட் டொழி.
43. கௌவை அகற்று.
44. சான்றோ ரினத்திரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திருந்தச்செய்.
50. சேரிடமறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
52. சொற்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோ னெனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக் கடிமைசெய்.
57. தீவினை யகற்று.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ மிகழேல்
61. தேசத்தோ டொத்துவாழ்.
62. தையல்சொல் கேளேல்.
63. தொன்மை மறவேல்.
64. தோற்பன தொடரேல்.
65. நன்மை கடைப்பிடி.
66. நாடொப் பனசெய்.
67. நிலையிற் பிரியேல்.
68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல்.
70. நூல்பல கல்.
71. நெற்பயிர் விளை.
72. நேர்பட வொழுகு.
73. நைவினை நணுகேல்.
74. நொய்ய வுரையேல்.
75. நோய்க்கிடங் கொடேல்.
76. பழிப்பன பகரேல்.
77. பாம்பொடு பழகேல்.
78. பிழைபடச் சொல்லேல்.
79. பீடு பெறநில்.
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
81. பூமி திருத்தியுண்.
82. பெரியாரைத் துணைக்கொள்.
83. பேதைமை யகற்று.
84. பையலோ டிணங்கேல்.
85. பொருடனைப் போற்றிவாழ்.
86. போர்த்தொழில் புரியேல்.
87. மனந்தடு மாறேல்.
88. மாற்றானுக் கிடங்கொடேல்.
89. மிகைபடச் சொல்லேல்.
90. மீதூண் விரும்பேல்.
91. முனைமுகத்து நில்லேல்.
92. மூர்க்கரோ டிணங்கேல்.
93. மெல்லினல்லாள் தோள்சேர்.
94. மேன்மக்கள் சொற்கேள்.
95. மைவிழியார் மனையகல்.
96. மொழிவ தறமொழி.
97. மோகத்தை முனி.
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல். 1
00. வித்தை விரும்பு.
101. வீடு பெறநில்.
102. உத்தம னாயிரு.
103. ஊருடன் கூடிவாழ்.
104. வெட்டெனப் பேசேல்.
105. வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு.
107. ஒன்னாரைத் தேறேல்.
108. ஓரஞ் சொல்லேல்.
நமது குழந்தைகள் தாய் மொழி வளர்க்கவும் ...
THANKS TO SUBRAMANIYAN KRISHNAN
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
0 comments:
Post a Comment