விரல்களை
மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்! நமது பிரபஞ்சம் நிலம், நீர்,
நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது.
அந்தப் பிரபஞ்சத்தில்
ஓர் அங்கமான நமது
உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில்
இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து
மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில்
இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை
விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் -காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும்
மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. தினமும்
காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து
தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்
விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை. சிந்தனைச் சக்தி வளர
தியான முத்திரை! தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி
வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள்
கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு
முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, டென்ஷன்
முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு,
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான
நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி
வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக்
கொள்ளவும். காது நன்கு கேட்க! காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால்
நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல்
அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய
முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.
சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை! மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா?
உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு
உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை
பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு
இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான
ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய
உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு
வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும். இரத்தம்
சுத்தமாக வருண் முத்திரை! இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும்,
தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது
போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை
குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த
முத்திரை குணமாகும். கொழுப்பு கரைய சூரிய முத்திரை! உடலுக்குத் தேவையான
வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு
குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை
விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும். கண்ணாடியைத்
தவிர்க்க பிராண முத்திரை! நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண
முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு
முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு
அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும்
மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
பார்வைத் திறன் அதிகரிக்கும். காய்ச்சல் குணமாக லிங் முத்திரை! இரண்டு
உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக்
கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப்
பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று
நோய் முதலியன பரவும்.
வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல்
நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை
கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால்
பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling )
முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.
நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல்
முதலியவற்றை அபான் வாயு(apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல்,
கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர
விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம்
செய்யவும். மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க.... வாயு முத்திரை,
அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக்
கொள்ளலாம். இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை இரத்தக் கொதிப்பைக்
கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை
வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.
எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள்
வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன்
உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத்
திகழும்.
souce : facebook
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
0 comments:
Post a Comment