விஸ்வரூபம் - அவ்ளோ சீன் இல்லிங்கோ - சந்தோஷ்


       இந்த பதிவுல நிறைய spoilerஸ் இருக்கு, இதை படிச்சா படத்தை ரசிக்க முடியாம போகலாம். இப்பவே சொல்லிட்டேன் புடிக்காதவங்க இங்கேயே எஸ் ஆயிடுங்க. படத்துல இரண்டு கதை.. ஒரு கதையில் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்குதுன்னு ஏன் ஒருத்தன் ஜிகாதி ஆவுறான்னு காட்ட முயற்சி செய்து இருக்காங்க.. இரண்டு நியூயார்க்கில் அல்கொய்தா செய்ய இருக்கும் பயங்கர ஆழிவை கமல் & குழு எப்படி முறியடிக்கிறாங்க.


படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச விஷயங்கள்

          படத்தின் மொத பத்து நிமிடங்களில் கமலின் நடிப்பு, ஒ மை காட் சான்ஸே இல்லை.. ஒவ்வொரு காட்சியிலையும் நளினமான, பெண் தன்மை மிக்க ஒரு கலைஞனாக பின்னியிருப்பாரு.. அவரது நடையிலாகட்டும் செய்கையிலாகட்டும்.. ஒரு காட்சியில அவரோட Hoodஐ சரி செய்வாரு ஒரு பெண் தன்னோட புடவை தலைப்பை சரி செய்யும் பொழுது expression குடுப்பாங்க பாருங்க அது மாதிரியே செய்வாரு.. அப்படியே பிரம்பின் உச்ச கட்டத்துக்கு போயிட்டேன்.. என்ன ஒரு நடிகன்டா.
       அப்கானிஸ்தான் சம்மந்தமான காட்சிகளில் கொஞ்சூன்டு ஏன் அந்த மக்கள் ஜிகாதிகளாகிறார்களுன்னு, ஏன் ஒருத்தன் மனித வெடிகுண்டு ஆவுறான்னு காட்டி இருப்பது தமிழுக்கு புதுசு நல்லாவும் இருக்கு..

படத்தின் அபத்தங்கள்

         ஒரு ஜிகாதி ஒரு போஸ்டரை காட்டி இதுல இருக்குறவனை புடிச்சி குடுத்தா இந்திய ராணுவம் 5 லட்சம் குடுக்குதாம் புடிச்சி குடுத்துடலாமான்னு கேக்குறாரு அதுக்கு முல்லா உமர் ரேஞ்சுல இருக்குற ஒரு ஆளு, முட்டாள் ஜிகாதி அதுவும் தமிழ் தெரிந்த ஜிகாதி ரொம்ப கஷ்டம் அவன் நமக்கு வேணுமுன்னு சொல்றது.. டேய் நீ அல்கொய்தாவுக்கு ஆல் எடுக்குறீங்களா இல்ல தனியார் பள்ளிக்கு தமிழ் வாத்தியார் தேடுறீங்களா?


            படையில சேர்ந்து நாலு ஜை ஜம்ப், நாலு லாங் ஜம்ப், நாலு முறை டும் டும்முன்னு சுட்ட உடனே குழுவுல பெரிய ஆள் ஆவுறது.. பின்லேடனை தவிர எல்லாருக்கும் இவரை பத்தி தெரிந்து இருப்பது. கமலை பின்லேடன் சந்திக்கலை சந்திச்சி இருந்தா ஹை காஷ்மீரின்னு சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்பாரு. அவன் அவன் லோக்கல் ரவுடி கேங்குல கேங் லீடரை பாக்கவே தலைகீழ நின்னு தண்ணி குடிக்கிறான்..இவரு சேர்ந்த நாலாவது நாளில் பின்லேடனை பாக்குறாரான் அதுவும் ஒரு Transmitterரோட..ஹுக்கும்.. அல்கொய்தா இயக்கத்தை பத்தி செய்திதாள்களில் வரும் செய்திகளை படிச்சி இருந்தாலே இன்னமும் பெட்டரா திரைக்கதை இயற்றி இருக்கலாம்...


              தீவிரவாத/போராளி இயக்கங்கள் அப்படின்னாலே AK 47ஐ கையில தூக்கிட்டு ஓடுறது, கும்பலா நின்னு டும் டும்முன்னு சுடுறது, அப்படிங்கிற பல நூறு வருஷத்துக்கு முந்தைய சிந்தனையில இருந்து கமல் இன்னமும் வெளிய வரவே இல்லை. லோக்கல் ரவுடிங்களே என்ன ஹைடெக்கா இருக்கானுங்க.. உலகத்துக்கே தண்ணி காட்டிட்டு இருக்குற ஒரு இயக்கத்தை காட்டும் பொழுது இவ்வுளவு லோக்கலாவா காட்டுவாங்க.. பின்லேடனை காட்டும் பொழுது அவர் சரக்கு கிளாசோட ஒரு மெத்தையில உக்காந்துட்டு இருக்க சுத்தி நாலு பிகருங்க டேன்ஸ் ஆடுற மாதிரி காட்டிடுவாங்களோன்னு லைட்டா பயந்துட்டேன் நல்ல வேளை அதுமாதிரி எதுவும் நடக்கலை...


           ஒரு காட்சியில மேல அமெரிக்க போர் விமானம் பறந்துட்டு இருக்கும் கீழ வெட்ட வெளியில ஜாலியா இவங்க பயிற்சி எடுத்துட்டு இருப்பாங்க.. இவங்க கிட்ட துப்பாக்கி கம்மியா இருக்குன்னு வெச்சிகோங்கன்னு நாலு துப்பாக்கியை போட்டு போயிடுவாங்களோன்னு பயந்துட்டேன்..


               இம்சை அரசனோட ஒற்றர் படைக்கு போட்டி அமைப்பா இருக்கும் RAWவுக்கு தெரிந்த விஷயம் கூட FBIக்கு தெரிலையாம்..அதுவும் அவங்க நாட்டில் நடக்கும் ஒரு பேரழிவை பத்தி.. இருந்தாலும் கமலுக்கு இவ்வுளவு காமெடி சென்ஸ் கூடாது..


            கமல் சார் கமல் சார் car chaseசீன் உங்களுக்கு புடிக்குமுன்னு எங்களுக்கு தெரியும் அதுக்காக இப்படி படத்துக்கு படம் மொக்கையா கார் சேஸ் சீன் வெச்சி எங்களை கொல்லாதிங்க ப்ளீஸ்..


               இந்த வில்லன் கூட செம காமெடி.... வழக்கமான தமிழ் படங்களை மாதிரி மொத்த திட்டத்தையும் கமல் கிட்ட சொல்லிடுவாரு.. எவ்வுளவு பெரிய திட்டம் போடுறான் இவ்ளோ மொக்கையாவா போடுவான். அவனோட கூட்டாளிங்க எல்லாரையும் புடிச்சிட்டாங்க இல்ல அழிச்சிட்டாங்கன்னு தெரியுது. ஆனாலும் தலைவரு சாவுகாசமா காரை புடிச்சி (இதுக்கு நடுவுல ஒரு ப்ளாஷ் பேக் வேற) பிளைட் புடிச்சி, பிளைட் டேக் ஆப் ஆன பின்னாடி டீ காபி எல்லாம் குடிச்சிட்டு (வழியில Airport duty free shopல ரெண்டு full வாங்கிட்டு போயி இருக்கலாம்.) குண்டை வெடிக்க வைக்க பண்ண முயற்சி செய்றாரு..


            நியுயார்கில் அணு குண்டுக்கு ஈடான ஒன்றை வெடிக்க வெக்க போறாங்க.. ஹீரோ கோஷ்டியும் சரி வில்லன் கோஷ்டியும் சரி.. பரபரப்பே இல்லாம பப்பரப்பான்னு சுத்துறாங்க.. அதுவும் ஹீரோ கோஷ்டி ஏதோ பேமலி டூர் போற மாதிரி போறாங்க.. கடைசி காட்சி செம காமெடி அந்த அணுகுண்டை வெடிக்காம இருக்க அணு விஞ்ஞானி ஹீரோயினி (நம்ம நாராயணசாமி மாதிரின்னு நெனைக்கேன்).. குண்டுக்கு மேல microoven வெச்சி மூடுது.. இந்த மேட்டர் கூட தெரியாத சப்பை மூக்கனுக்கு புக்குஷிமோவுல எம்முட்டு கஷ்டப்பட்டாங்க.. இவங்களை பெரிய காமெடி அந்த குண்டை வெடிக்க வெக்க இருந்த ஆப்ரிக்கன்.. ஹீரோ கோஷ்டி உள்ள நுழைந்த உடனே ஒரு சவுண்டு என்னாடா சவுண்டுன்னு பாத்தா குக்கர் சவுண்டு.. அந்த ஆப்ரிக்கன் குண்டு வெக்க வந்தானா இல்ல சோறு பொங்க வந்தானா? ப்ளடி தின்னிப்பண்டாரம்..


              கமல் தெய்வ பக்தி மிக்க,மனித நேயம் மிக்க உளவாளியாம்.. ஒரு காட்சியில இன்னொரு உளவாளியிடம் உன்னை அவன் பையில இருந்து அந்த transmitterஐ எடுக்க சொன்னேன் இல்ல ஏன் எடுக்கலை பாரு நம்மால அநியாயமா அவன் சாகப்போறான் அல்லா நம்மளை மன்னிக்க மாட்டாருன்னு.. எச்சூஸ்மீ இந்த காட்சிக்கு முன்ன காட்சியில நீங்க வெச்ச transmitterரால எத்தனை குடும்பம் சின்னா பின்னமாச்சே அதுக்கு மட்டும் அல்லா ஆப் பாயில் போட்டு குடுப்பாரா என்ன? கமல்ஜி உங்களுக்கு ஆல்ரெடி தேவையான விளம்பரம் இருக்கு வெய் மோர் விளம்பரம்யா..


             ஹாலிவுட் படங்களில் அவங்க திரைக்கதைக்கு குடுக்கும் முக்கியத்துவமும் அதற்கான உழைப்பும் அளப்பறியது. அல்கொய்தா போன்ற இயக்கங்களை பற்றிய விவரங்களை அறிய கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தா இதை விட பெட்டரான திரைப்படத்தை அளித்து இருக்கலாம்..ஹாலிவுட் கலைஞர்களை வெச்சி எடுத்துட்டா மட்டும் படம் ஹாலிவுட் ரேஞ்சாயிடாது..


          இரண்டு கதை களங்களில் எதையாச்சும் ஒண்ணை தேர்வு செய்து இருக்கலாம்.. 5 ரூபாய் குடுத்தா 500 ரூபாய்க்கு நடிக்கிற மாதிரி இரண்டையும் காட்ட முயற்சி செய்தது சொதப்பலாயிடிச்சி.. ரெண்டாவது கதை களம் + பிட்சா மாதிரியான ஒரு திரைக்கதை செய்து இருந்தா டக்கரான ஆக்‌ஷன் திரில்லரா வந்து இருக்கும்.. பெட்டர் லக் நெஸ்ட் டைம்..

0 comments:

Post a Comment