பாரதி விழா கொண்டாட்டம்

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரதி  விழா   கொண்டாட்டம்
 
                  கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரதியார்  பிறந்த நாள் விழா 'பாரதி விழா'வாக இன்று காலையில்  கொண்டாடப்பட்டது. 
 
                        பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் தலைமை தாங்கி விழாவைத் துவக்கி வைத்தார் 'பாரதியின் பைந்தமிழ்ப் பற்று' என்ற தலைப்பில் ஆசிரியர்  திருமுருகன் பேசினார்.'பாரதியின் விடுதலை வேட்கை' என்ற தலைப்பில் ஆசிரியர் ரவிக்குமார் பேசினார்.  'என்னைக் கவர்ந்த பாரதி' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,மாறுவேடப் போட்டி  மற்றும் பாட்டுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் அமுதா,அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
 
                      { புகைப்படத்தில் பாரதியார் போன்று வேடமணிந்து பாரதியாரின் பாடலை பாடும் மூன்றாம் வகுப்பு மாணவன் விமல்}
 

0 comments:

Post a Comment