கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளின் படைப்புகள்

 நன்றி மறவாத நல்லவர்
     வ.உ.சி. கோவை சிறையில் இருந்த போது,அவரிடம் பரிவு காட்டி உதவிகள் செய்தவர் சி.கே.சுப்பிரமணிய முதலியார். அவர் நினைவாக வ.உ.சி. தன் மகனுக்கு, சுப்பிரமணியன்
என்று பெயர் வைத்தார். இதேபோல் மீண்டும் வழக்கறிஞர் தொழில் செய்யத் தமக்கு அனுமதி பெற்றுத் தந்த பிரிட்டிஷ் நீதிபதி வாலஸ் பெயரை நினைவூட்டும் விதமாக,தன் இன்னொரு மகனுக்கு வாலேசுவரன் என்று பெயரிட்டார். 

 "அறிந்த பெயர்கள்..அறியாத தகவல்கள்.." புத்தகத்திலிருந்து 



ர.தமிழ்ச்செல்வி 
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்

எல்லாம் நன்மைக்கே..
     தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக்கூடம் தீப்பிடித்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவரது மனைவி, "இருபது லட்சம் டாலர் மதிப்புள்ள இயந்திரங்களும், இத்தனை காலம் பாடுபட்டுச் செய்த ஆராய்ச்சிக் குறிப்புகளும் எரிந்து விட்டனவே..! இனி என்ன செய்யப் போகிறோம்?" என்று வருத்தத்துடன் கேட்டார்.
     அதற்கு எடிசன் கூறினாராம், "இந்தத் தீயில் நம்முடைய தவறுகளும் பொசுங்கி விட்டன. அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இனி நாம் முதலிலிருந்து வேலையைத் தொடங்குவோம்."
    இவ்வாறான அவரது எல்லாம் நன்மைக்கே..என்ற நேர்மறையான  மனப்பான்மையே அவரது மகத்தான சாதனைகளுக்கு அஸ்திவாரமாய் அமைந்தது.

' விஞ்ஞானிகளின் வாழ்வில்...' புத்தகத்திலிருந்து தொகுத்தவர்



ந.ர.காவ்யா
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்


முதல் முதலில் பூக்கள் மலர்ந்தது எப்போது?
   நானூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பாசியும், பூஞ்சையும் தோன்றின.அதற்கு நூ'று மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய புதர்களும் செடிகளும் மண்டிக்கிடந்தன. ஆனால், நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் முதல் பூச்செடிகள் தோன்றின. இது டைனோசர்கள் வாழ்ந்த கிரேபிஷியஸ் காலத்தின் மத்தியில் தோன்றின. இதற்கு பிறகுதான் பூக்களில் உள்ள விதைகள் மூலமாக செடிகள் தோன்றின. இந்த காலகட்டத்திற்கு முன்பு உள்ள தாவரங்கள் எதையும் மனிதன் உணவுக்காக பயன்படுத்த முடியவில்லை.


'அறிவியல் அதிசயங்கள்' புத்தகத்திலிருந்து தொகுத்தவர்


ர.திவ்யதர்ஷினி
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்

0 comments:

Post a Comment