மங்கல்யான் வெற்றிக்கு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கைதட்டி பாராட்டு 

தேவகோட்டை -செப்-விண்வெளித்துறையில் இந்திய வரலாற்றுச் சாதனையை அறிந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தொடர்ந்து 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.                                        தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டதில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
                                                  இந்த சாதனையை செய்த அணைத்து விஞ்ஞானிகள் ,பொறியாளர்கள்,தொழில் நுட்ப ஊழியர்கள் அனைவர்க்கும் பாராட்டு தெரிவித்து பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரிய,ஆசிரியைகள் ,மாணவ,மாணவியரின் சார்பாக பாரதப் பிரதமரின் ஆலோசனையின்படி 5 நிமிடம் தொடர்ந்து கைதட்டி பாராட்டை மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.மாணவ,மாணவியர் தங்களுக்குள் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பேசுகையில் வரும் காலத்தில் மாணவர்களாகிய நீங்களும் சிறந்த விஞ்ஞானிகளாக நம் இந்திய தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.மாணவர்களும் சிறந்த விஞ்ஞானிகளாகி நாட்டுக்கு நன்மை செய்து பெருமை அடையச் செய்வோம் என உறுதியோடு கூறினார்கள்.

பட விளக்கம் : விண்வெளித்துறையில் இந்திய வரலாற்றுச் சாதனையை அறிந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தொடர்ந்து 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.




0 comments:

Post a Comment