மண்டல அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் முதலிடம்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பேச்சுப்போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 10 மையங்களில் பல்வேறு திருக்குறள் தலைப்புகளில் இப்போட்டி நடைபெறும்.ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் 10 மாணவர்களை தேர்வு செய்யப்படுவர்.தேர்வு பெற்ற மாணவர்கள்  சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.அங்கு முதல் மூன்று இடங்கள் பெறுவோர் முறையே 10000,7500 மற்றும் 5000 என பரிசுகள் பெறுவர்.

      இவ்வாறு கோவை லாரல் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற  மண்டல அளவிலான போட்டிகளில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு பிரிவில் 133 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் செ.லோகேஸ்வரன்  முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான். அதுமட்டுமில்லாது இம்மாணவன் அடுத்து சென்னையில் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதியில் நடைபெறும் மாநில அளவிலான சுற்றுக்கும் தேர்வாகியுள்ளான்.பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள்,ஆசிரியர்கள் திருமுருகன், ரவிக்குமார், முனியம்மாள், அமுதா, அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் பாராட்டினர்.




0 comments:

Post a Comment