தேன் உண்ட வண்டு.

கால் வலிக்கப்பயணம்
வலி நிவாரணியாய்
பேருந்து தொலைக்காட்சி.

மணல் லாரியில்
சிந்தும் தண்ணீர்
ஆற்றின் கண்ணீர்.

கதிரவன் கண்டு
நாணம் கொண்டது
செவ்வானம்.

பூ அழகு
பாட்டும் இனிமை
மயங்கிய வண்டு.

பழங்கதை ஆனது
ஆற்றில் வெள்ளம்
மணற் கொள்ளை.

மயக்கப் பாடி
மயக்கம் கொண்டது
தேன் உண்ட வண்டு.

Thanks to Mr. Rajamayam.

1 comment:

  1. தாங்கள் எமது ஹைக்கூ கவிதையை தங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள். நான் ஓர் நிதியுதவி உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி (வரலாறு) ஆசிரியன்.

    ReplyDelete