உண்மை முகம்... உணரும் தருணம்...?


 மகிழ்ந்து சிரிக்க ஒன்று பொய்யாய் சிரித்து மழுப்ப மற்றொன்று குமுறி அழுதிட ஒன்று போலியாய் நீலி கண்ணீர் வடிக்க மற்றொன்று
பரிவு காட்டிட ஒன்று
பாசாங்கு செய்திட மற்றொன்று பணிவு செய்ய ஒன்று பாய்ந்து குதற மற்றொன்று
வேண்டிப் பெற்றிட ஒன்று
பெற்றதை ம(றை)றக்க மற்றொன்று கூடி பேசிட ஒன்று குரூரம் வளர்த்திட மற்றொன்று
கண்டு பதைத்திட ஒன்று
காணாதிருந்திட மற்றொன்று கனிந்து உருகிட ஒன்று கல்லாய் இறுகிட மற்றொன்று
ஆயிரமாயிரம் முகங்கள்
நொடியில் மாறிட உண்மை முகம் உணரும் தருணம்....?

நன்றி! - திரு. இராமஜெயம்.

0 comments:

Post a Comment