தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள்,தேவக்கோட்டை சேவுகன் அண்ணாமலை கலை அறிவியல் கல்லூரியின் ஆய்வகங்களைப் பார்வையிட்டனர்.


              தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவ,மாணவியரின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிச் செயலர் திரு.சோமசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலைமை ஆசிரியர் திரு L.சொக்கலிங்கம்,படடதாரி ஆசிரியர் செல்வம்,இடைநிலை ஆசிரியை முத்துலெட்சுமி ஆகியோர் தேவக்கோட்டை சேவுகன் அண்ணாமலை கலை அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச் சென்று ஆய்வகங்களைப் பார்வையிட்டனர்.
                கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் தலைமையில்,விலங்கியல் துறைத் தலைவர் திரு.பட்சிராஜன் முன்னிலை வகிக்க வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

                பின்னர் கல்லூரி பேராசிரியர்கள்  மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு துறைகளின் ஆய்வகங்களை காட்டி விளக்கினார்கள்.              நிறைவாக மாலையில் கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் தலைமையில்,பள்ளித்தலைமை ஆசிரியர் திரு L.சொக்கலிங்கம் முன்னிலை வகிக்க,பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.முடிவில் தாவரவியல் துறை துணைத்தலைவர் வீரலெட்சுமி நன்றி உரையாற்றினார்.

           

 இது பற்றிய சிறப்பு படத்தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
    














 நன்றி,
        திரு L.சொக்கலிங்கம்
         தலைமை ஆசிரியர்


0 comments:

Post a Comment