அகத்தின் அழகு முகத்தில் தெரியும் :



நன்றி - திரு. ராஜேஷ்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் :

அப்பகுதியில் வலம் வரும் போதெல்லாம் அரசன் அவனைப் பார்க்கும் போது மட்டும் கோபம் தலைக்கேறியது.

இதை அரசனுடன் வந்த அமைச்சரும் கவனித்தார்.

சில நாட்களுக்குப் பின்பு ஒருநாள் அரசன் அவ்வழியில் வந்த போது சந்தனக் கட்டை வணிகரைப் பார்த்தான்.

இப்போது அரசனுக்கு அவனிடம் கோபம் வரவில்லை.கோபத்துக்குப் பதில் மகிழ்ச்சி வந்தது.

அரசன் அவனைப் பார்த்து புன்னகைத்தான்.

அரசன் அமைச்சரிடம், “முன்பெல்லாம் இந்த சந்தன மர வணிகரைப் பார்த்தால் கோபம் வந்தது. ஆனால், இன்று இவனைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி வந்ததே...ஏன்?” என்று கேட்டான்.

அமைச்சர் சொன்னார்.

“அரசே! இதுநாள் வரை இந்த வணிகன் நீங்கள் வரும் போது, அரசர் இறந்தால் சந்தனக்கட்டையால் எரிப்பார்கள். நமக்கு சந்தனக்கட்டை வணிகம் நன்றாக நடக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். நான் சில நாட்களுக்கு முன்பு இவனிடம், ‘அரசர் பிறந்தநாளுக்கு, ஹோமம் செய்வதற்கு சந்தனக் கட்டைகள் தேவைப்படுகிறது. இனி அரண்மனையில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் உன்னிடமே சந்தனக் கட்டைகள் வாங்கப் போகிறோம்’ என்று சொன்னேன்.

அதனால் அவன், அரசர் நூறாண்டு காலம் வாழ வேண்டும். அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்தனக் கட்டைகள் வாங்குவார்கள். அரண்மனை சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்தனக்கட்டைகள் வாங்குவார்கள். தனது வணிகம் செழிப்பாகும்’ என்று எண்ணுகிறான்.

அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் தங்கள் மனத்தையும் மாற்றிக் கொண்டுள்ளது”

0 comments:

Post a Comment