அப்பாவின் வலிகள் ....!!!

Thanks to Mr. Rajesh Kumar

அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்..

ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து
சைக்கிள் மிதிக்கிறார்..
ஒரு அப்பா குடும்பத்துக்காகவே
மீன் கூடையை
சைக்கிளில் சுமக்கிறார்...

ஒரு அப்பா மன உளைச்சலை
வெளியே விட்டு
சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்...

ஒரு அப்பா தீபாவளி முன்னிரவில்
கடன் கேட்டு வீதியில் அலைகிறார்...

ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள்
குடும்பத்தை அனுப்பிவிட்டு
தள்ளு வண்டி காரனிடம்
டவல் வாங்குகிறார்...

ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து
தெரு சுற்றி காலம் கடந்து
பசியோடு வீடு வருகிறார்...

பாவம் அப்பாக்கள்.
அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்...!!!!!


Dedicated to Father

0 comments:

Post a Comment